செய்திகள்பிரதான செய்திகள்

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழப்பு . .!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு ஒழிப்புத் திட்ட செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு பட்டதாரிகளின் தொடர் போராட்டம்! அரசியல்வாதிகள் எங்கே?

wpengine

பசில் பல மோசடிகள்! சற்றுமுன்பு ஆணைக்குழு முன்

wpengine

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

Editor