பிரதான செய்திகள்

டட்லி சிறிசேன (Dudley Sirisena) அரசியலில் ஈடுபட தயார் நிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) சகோதரரும் முன்னணி அரிசி வர்த்தகருமான டட்லி சிறிசேன (Dudley Sirisena) அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தெரியவருகிறது.

தேசிய அரசியலில் ஈடுபடுமாறு பல்வேறு தரப்பினர் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் பல காலமாக விடுத்து வரும் அழைப்புக்கு அமைய அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

டட்லி சிறிசேனவின் டிக் டொக் காணொளி ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. அதில் அவர் அரசியல்வாதி போல் இலங்கையின் தேசிய ஆடையை அணிந்துள்ளதுடன் மேலும் பல உடைகளில் தோற்றியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

டட்லி சிறிசேன இலங்கையின் முன்னணி அரசி வர்த்தகர்களில் ஒருவர் என்பதுடன் அவரது நிறுவனம் உட்பட சில நிறுவனங்களே இலங்கையின் தேசிய சந்தையில் அரிசிகளின் விலைகளை தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாட்டில் அரிசி விலைகள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம், இந்தியா, சீனா, மியன்மார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. 

Related posts

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினை! சீ.வி. விக்னேஸ்வரன் முற்றுகை

wpengine

தமிழ் அரசியல்வாதிகளுடன் இரத்தினபுரி மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine