பிரதான செய்திகள்

ஞாயிறு தாக்குதல் 8 முன்னால்,இன்னால் அமைச்சருக்கு விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பேரை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை 28 ஆம் திகதியும், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை எதிர்வரும் 31ஆம் திகதியும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அது தவிர முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஆகியோரை செப்டெம்பர் 02 ஆம் திகதியும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை செப்டெம்பர் 03 ஆம் திகதியும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை செப்டெம்பர் 07 ஆம் திகதியும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை செப்டெம்பர் 08 அம் திகதி ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு! அமைச்சர் றிசாட்

wpengine

நிந்தவூர் தபால் நிலையத்தின் சிரேஷ்ட தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களின் பிரியாவிடை

wpengine

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் கூட்டு எதிர் கட்சி

wpengine