பிரதான செய்திகள்

ஞானசார தேரரை விடுதலைக்காக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.

சந்தியா எக்னலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தெரிவித்து இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

குறித்த போராட்டம் பிற்பகல் இரண்டு மணியளவில் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்படவுள்ள இந்த பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை பொதுபலசேனா உள்ளிட்ட பல பௌத்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமானறு சமூக வலைத்தளங்களினூடாக ஆதரவாளர்களளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தவிசாளர்கள்..!!!!

Maash

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

wpengine