பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்யமுடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும்

(ஊடகப் பிரிவு)
நான்கு பொலிஸ் குழுக்களை நியமித்து ஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்கட்சி நேற்று கொழும்பில் நடாத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துவெளியிடும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

முன்னர் ஞானசார தேரரை பாவித்தே இவர்கள் முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து பிரித்தார்கள். இப்போதும் அதே வேளையைதான் இவர்கள் செய்ய எத்தனிக்கிறார்கள்.

இந்த நாட்டில் சிங்கள, தமிழ்,முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நல்லுறவை பேணி வாழவேண்டும் என்பதே கூட்டு எதிர்கட்சியின் கொள்கை என அவர் குறிப்பிட்டார்.

Related posts

றிஷாட் இல்லத்தில் ஏற்பட்ட மரணத்தின் சந்தேகங்கள். விசாரணையில் தலையிடுவது யார் ? முஸ்லிம் சிறுமிக்கு ஏற்பட்டிருந்தால் ?

wpengine

ரணிலுக்கு எதிரான விசாரணை அடுத்த வாரம்

wpengine

ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து

wpengine