பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல! அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்ட முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம், கல்வி ஆகியனவற்றை இல்லாமல் அழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பண்டைய அரசர்கள் அரச திறைசேரியின் சொத்துக்களை மாநாயக்க தேரர்களுக்கு பூஜையிட்டனர். தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த உரிமைகளை கொள்ளையிட முயற்சிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் அரச சொத்துக்களை மிகவும் இழிவான முறையில் கொள்ளையிட முயற்சிக்கின்றது.

நாட்டின் பிரதான பிரச்சினை ஞானசார தேரரின் பிரச்சினை அல்ல.

கலாச்சார, சமய மற்றும் தேசிய பிரச்சினைகள் பல எழுந்துள்ளன, இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்துவதற்கு பதிலாக அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்ட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

ரோஹித அபேகுணவர்தனவை பார்வையீட்ட மஹிந்த

wpengine

இன்று மாலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம்! திங்கள் வரை

wpengine

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் மரணம்

wpengine