பிரதான செய்திகள்

ஜோதிடத்தை நம்பி அரசியலில் இறங்கும் பிரபலங்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல முன்னணி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலம் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார்.

இது குறித்து தனது நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தனது சாதக பலன்படி எவ்வாறான பெறுபேறு கிடைக்கும் என ஆராய்ந்துள்ளார்.

எனினும் அவரின் எதிர்பார்ப்பிற்கு மாறான பதில் கிடைத்துள்ளது.
குறித்த பிரபலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், இரண்டாவது நிலையை அடைய முடியும் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலத்தின் ஜனாதிபதி தேர்தல் மீதான ஆர்வம் குறித்து, நாடாளுமன்றத்தில் வைத்து மஹிந்தவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியித் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியின் ஒருதரப்பினர் தெரிவித்திருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

தீக்கரையாகிய 30 மோட்டார் சைக்கிள்களும், 25 துவிச்சக்கர வண்டிகளும்!

Editor

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் வாகனப் பதிவு கட்டணம் அதிகரிப்பு

wpengine