பிரதான செய்திகள்

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றன.   

இதில் பெருந்திரளானோர் பங்கேற்றுள்ளதுடன், ஜோசப் ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

wpengine

விக்னேஸ்வரனிடம் சுகநலன் விசாரித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine

மீண்டும் அதானியுடன் பேச்ச்சுவார்த்தைக்கு தீர்மானம் இல்லை , அரசாங்கம் தெரிவிப்பு . !

Maash