உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜே.எல்.கபூர் தலைமையில் காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்சே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கொலை தொடர்பாக ஜே.எல்.கபூர் தலைமையில் விசாரணை கமிஷனும் அப்போது அமைக்கப்பட்டது.


ஆனால் ஜே.எல்.கபூர் குழுவால் காந்தியின் கொலைச்சதி முழுவதையும் வெளிக்கொணர முடியவில்லை எனவும், புதிய விசாரணைக்குழு ஒன்றை அமைத்து காந்தியின் கொலையை விசாரிக்க வேண்டும் எனவும் மும்பையை சேர்ந்த அபினவ் பகத் அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் பட்னிஸ் மும்பை ஐகோர்ட்டில் தற்போது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘7 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் காந்தி சுடப்பட்டதாகவும், இதில் 3 தோட்டாக்கள் காந்தியின் உடலை துளைத்த நிலையில், மீதமுள்ள 4 தோட்டாக்கள் சம்பவத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்ததாக அரசு தரப்பு கூறியுள்ளது. ஆனால் காந்தியின் உடலில் 4 தோட்டாக்கள் இருந்துள்ளது. அப்படியானால் அங்கு கோட்சேயை தவிர வேறு கொலையாளிகள் யாரும் இருந்தனரா? என்பதை கண்டறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் திகதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

றிஷாட்டை பற்றி புரிந்துகொண்ட பேரினவாதிகள்

wpengine

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தபால் விண்ணப்பம் கோரல்

wpengine

மசூத் அசாரை தீவிரவாதியாக குற்றம்சாட்டும் இந்தியா! ஆதாரம் தேவை சீனா

wpengine