பிரதான செய்திகள்

ஜீ.எஸ்.பி.பாரிய பாதிப்பாக இருக்காது அமைச்சர் றிஷாட்

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி சலுகை நீக்கம் காரணமாக பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி சலுகையை இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று அமைச்சர் ரிசாதின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர், கடந்த வருடம் அமெரிக்காவுக்கான மொத்த ஏற்றுமதியின் பெறுமதி 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவற்றில் பெரும்பாலானவை ஆடை ஏற்றுமதிகளாகும்.

ஆடைகளுக்கு அமெரிக்காவினால் ஜீ.எஸ்.பி சலுகை வழங்கப்படுவதில்லை. அந்த வகையில் குறித்த சலுகை நீக்கம் காரணமாக கூடியபட்சம் 20-25 வீத ஏற்றுமதிகளே பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

முதலில் பேய் அடுத்து தேனீக்கள்; பதறியோடினர் எம்.பி.கள்

wpengine

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

wpengine

நீதி கேட்ட மறிச்சுக்கட்டி மக்களிடம் அமைச்சர் ஹக்கீம் ஆதரவாளர்கள் காட்டம் (வீடியோ)

wpengine