பிரதான செய்திகள்

ஜப்பார் அலிக்கு முன்னால் அமைச்சர் நஸீர் அனுதாபம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு செயலாளருமான ஜப்பார் அலியின் மரண செய்தியை கேட்டு மிகவும் கவலையடைந்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அனுதாப செய்தியில் மேலும்,

கட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிர் உள்ளவரை மிக கச்சிதமாக செயற்பட்டு வந்த அன்னார் அதிக சமூக ஆர்வ விடயங்களிலும் சமூக மற்றும் மார்க்க சார் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆரம்ப காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் வளர்சிக்கு அதிக பங்களிப்பு செய்து வந்ததுடன் சிறந்த அரசியல்வாதியாகவும், மக்களுக்காகவும் அதிக தியாகங்களை செய்தவர்.

கடந்த காலங்களில் நான் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அதிகமாக எனது திருகோணமலை காரியாலயத்திற்கு வருகை தந்து கட்சி விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளார்.

அத்துடன், பல வகையான ஆலோசனைகளையும் எனக்கு முன்வைத்து வந்ததுடன், மக்கள் பிரச்சினைகளையும் என்னிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளையும் பெற்று தரக்கோருவார் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன் பா.உ

wpengine

பள்ளிவாசலில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் – ஷிப்லி பாறுக்

wpengine

த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே! சாய்ந்தமருது நகரசபை நான் நிறுத்தினேன்

wpengine