பிரதான செய்திகள்

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் நாடுபூராகவும் தொடரும் போராட்டம்!!!

உலக சுகாதார இஸ்தாபனத்தின் (WHO) நடைமுறைகளை கொரோனா விடயத்தில் பின்பற்றும் அரசு இந்த ஜனாஸா எரிப்பு விடயத்தில் மாத்திரம் மாற்றமாக செயற்படுகிறது.

இதற்கு முன் இருந்த எந்த அரசும் இப்படியான வேதனையான எந்த செயலையும் எமது சமூகத்திற்கு செய்யவில்லை.
இந்த அரசு இந்த இனச்செயலை உடன் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் இன்று இந்த பொரளை கனத்தையில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போல் நாடுபூராகவும் நடத்துவோம்.

அதேபோல் ஜனாஸா எரிப்பு எதிராக உலக நாடுகளில் வாழும் இலங்கை உறவுகளும் குரல்கொடுத்துவருகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து இந்த அரசு சரியான நிபுணர்குழுவை நியமித்து ஆய்வு செய்து ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இன்று கனத்தைக்கு முன்னாள் இடம்பெற்ற ஜனாஸா எரிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான #ரிஷாட் #பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும், எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Related posts

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயரம்

wpengine

பிள்ளைகளின் கல்விக்காக சிறுநீரகத்தை விற்ற தாய்

wpengine

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் எரிசக்தி அமைச்சர்

wpengine