பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் உத்தியோக வெளிநாட்டு பயணத்தையொட்டி 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி மற்றும் பொருளாதர நிலைப்படுத்தல், தேசிய கொள்கைகள் அமைச்சராகவும், ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பதில் ஏற்றுமதி ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பதில் இராஜாங்க அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பதில் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் செயற்படவுள்ளனர்.

Related posts

(Update) அரநாயக்க மண்சரிவு: Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள்

wpengine

வவுனியாவில் காணிப்பிரச்சினை! மக்களை ஏமாற்றிய மைத்திரி

wpengine

உயர் தரத்தில் மூன்று சித்தியா? விண்ணப்பம் கோரல்

wpengine