பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்.

“ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச வரவேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளினதும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்துகொண்டவன் என்ற வகையில், முன்வைக்கப்பட்ட அந்த பிரேரணைக்கு எந்தவித எதிர்ப்பும் முன்வைக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

இந்த பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர்” அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

வவுனியாவில் பொதிமோசடி! 7 பொலிஸ் முறைப்பாடு

wpengine

இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசு

wpengine

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

wpengine