பிரதான செய்திகள்

ஜனாதிபதி ரணில் விரைவில் வெளிநாட்டு பயணம்! கடன் தொடர்பில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி , ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்குனர்களுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு ஜப்பானிடம் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

சவூதி அரேபியா இளவரசர் அல் சவூத் இலங்கை விஜயம்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine