பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதிக்கிறங்குவோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. அந்த ஊழல் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் மோசடிகளுக்கு இடமளிக்கமாட்டோம் எனவும் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வாக்களித்த மக்களுக்கும்,றிஷாட் அமைச்சருக்கும் நன்றி! வட மாகாண சபை உறுப்பினர் அலிகான்

wpengine

தன்னை அதிகாரமிக்கவராக காட்டிக்கொள்ள நினைக்கின்றார் ஹாபீஸ் நசிர் -அமீர் அலி

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine