உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மோசடி; ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹேக்கர்கள் மூலம் அமெரிக்க சர்வர்களை தாக்குதல் நடத்தியதாகவும், பொய்ச் செய்திகளைப் பரப்பியதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழும்பின.

ட்ரம்ப் தவிர அனைத்துக் கட்சியினரும் ரஷ்யாவின் தலையீட்டைக் கண்டித்தனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் ஜனவரி 20 வரை இருக்கிறது. அதுவரையிலும் அதிபர் அதிகாரத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுக்க முடியும்.

அதற்கு முன்னதாக, ரஷ்யா மீது விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று புலனாய்வுத் துறையினருக்கு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் புலனாய்வுத் துறையினர், அடுத்து வரப்போகும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் தவிப்பதாக தெரிகிறது.

ட்ரம்ப் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தவர், மேலும் ரஷ்யாவுடனும், ஜனாதிபதி புட்டினுடனும் நல்லுறவை விரும்புபவர் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றாகும்.

அதே சமயத்தில் குடியரசுக் கட்சியின் செனட் அவை மூத்த உறுப்பினர் ஜான் மெக்கய்ன், ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படவும் தயார் என்று கூறியுள்ளார். செனட் சபையிலும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடு குறித்த விவாதம் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புலனாய்வுத் துறையின் விசாரணை ஒரு புறம் இருக்க, ட்ரம்பின் நண்பனான ரஷ்யாவை, பாராளுமன்றத்தில் வறுத்தெடுக்க செனட்டர்களும் காத்திருக்கின்றனர்.

Related posts

விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

wpengine

ஊடக அமைச்சில் செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டு

wpengine

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

wpengine