பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண அளுநர்! தகவல்

ஜனாதிபதியின் செயலாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ விரைவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி செயலராக இருந்த பி.பி.அபயகோன் நேற்று முன்தினம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகினார்.

இதனையடுத்து தாமே அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஜூன் 22ம் திகதியே பதவி விலகி விட்டதாகவும் அவரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஜூன் 27ம் திகதியன்று ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கையின் சிரேஸ்ட அரச சேவையாளர் ஆவார்.

கடந்த 1963ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பதவியில் இணைந்த அவர், 2001ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையின் போது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கள மக்களுக்கு மஹிந்த வீரன்! பிரபாகரனுக்கு நினைவு தூபி பிரச்சினை இல்லை

wpengine

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

wpengine

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்;ஒருநாள் நீடிக்கும்!

Editor