பிரதான செய்திகள்

ஜனாதிபதி சட்டத்தரணியாக தழிழர் நியமனம்

இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணியாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளார்.

25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனம் பெற்றனர்.

இவர்களில் இரு தமிழர்களும் இரு முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்கும்.
38 வருடகாலமாக சட்டத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக ஜனாதிபதி சட்டத்தரணியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் கொண்ட தவராசா, பல்வேறு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டமை, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் சட்டத்தரணி தவராசா கையாண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக அவர் தரமுயர்ந்துள்ளமை தமிழர் தரப்புக்கு ஒரு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

wpengine

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

Editor

ஜனவரியில் உள்ளுராட்சி தேர்தல் ரணில்

wpengine