பிரதான செய்திகள்

ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வர தான் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


பொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.


முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் நம்பிக்கை உள்ளது என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை

wpengine

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine

அழகும் கெட்டது தொழிலும் கெட்டது

wpengine