பிரதான செய்திகள்

ஜனாதிபதி எண்ணக்கரு வேலைத்திட்டம் வவுனியாவில்

ஜனாதிபதியின் எண்ணக்கருவின் கீழ் போதையற்ற தேசத்தை கட்டி எழுப்புதல் நிகழ்ச்சித்திட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த நிகழ்வு, நேற்றைய  தினம்(10) அண்ணா நகர் பொது நோக்கு மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.

இதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், போதைப்பொருட்களை இனங்காண்பது தொடர்பில் விளக்கமளித்தனர்.

போதைப்பொருளை கட்டுப்படுத்துவது மற்றும் அதனால் உடலுக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் குறுந்திரையில் விளக்கமாக காண்பிக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போதைப்பொருள் அற்ற இலங்கையை உருவாக்க அனைவரும் அயராது பாடு பட வேண்டும் எனவும்,இது சம்பந்தமாக 0718591343 என்ற தனது இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வானது காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் தலமையில் இடம் பெற்றதுடன், இதில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி, மகாறம்பைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம அலுவலர் மகாறம்பைக்குளம், கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related posts

ஹசன் அலிக்குரிய ‘அந்தஸ்தைப் பறிக்கும் தேவை இல்லை’

wpengine

றிஷாட் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஆனந்த சாகர தேரர்

wpengine

மன்னாரில் மீண்டும் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் போராட்டம்.

wpengine