அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் துபாய் பயணமானார் .

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் E. K – 651 விமானத்தின் மூலம் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

மன்னார் புதைகுழி அகழ்வு 133ஆவது நாளாக தொடர்கின்றது.

wpengine

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது.

wpengine

கிழக்கு முதலமைச்சு முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்கின்ற தோற்றப்பாட்டினை உருவாக்க சிலர் முனைகின்றனர் ஷிப்லி

wpengine