பிரதான செய்திகள்

ஜனவரி – ஏப்ரல் 8 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 564பேர் பலி!

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்துக்களில் 2,446 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் 21 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Related posts

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine

பகலில் சிலர் போதகர்கள் போதனை!இரவில் கன்னியாஸ்திரிகளோடு இருப்பார்கள்.

wpengine

4வது ஆசிய – பசுபிக் நீர் உச்சி மாநாடு!எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர்

wpengine