பிரதான செய்திகள்

சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கோரிக்கை

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனைச்சாவடியால் பயணிகள் தினமும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

எங்கேயோ குண்டு வெடித்ததற்கு இங்கு சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர். தற்போதுள்ள நிலைமைகளில் இச்சோதனைச்சாவடி பேரூந்து நிலையப் பகுதியில் தேவையற்றதே. இதனை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்விடயம் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு நாங்கள் கடுமையான அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆனால், தற்போது ஆட்சியாளர்களாக இருக்கின்றவர்கள் இது குறித்து பேசமுடியும்.

இவ்விடயங்களில் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஒரு முயற்சி மேற்கொள்ள வேண்டும். எங்கேயோ குண்டுகள் வெடித்ததற்காக இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பொதுமக்களுக்கு இடையூறுகளையும் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதனைப் பேசும் போது நாங்கள் பாதுகாப்புத் தரப்பினரை குறைகூறுவதாக அமைந்து விடக் கூடாது.
தற்போது நிலைமைகள் சீராகி வருகின்றது. எந்தப் பகுதிகளிலும் இவ்வாறான பாரிய சோதனைகள் காணப்படவில்லை. இதனால் மக்களுக்கு பாரியளவில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சோதனை சாவடியினை புதிய பேரூந்து நிலையப் பகுதியிலிருந்து உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு இடையூறுகள் இன்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் அனுப்பி வைக்க வேண்டும்.

wpengine

மானிய விலையில் பொது மக்களுக்கு பொதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

wpengine

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

wpengine