பிரதான செய்திகள்

சொகுசு வாகனம் கொள்வனவு செய்த ரவூப் ஹக்கீம்

சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 2.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.


இந்தத் தொகையில் 1.65 பில்லியன் ரூபாவை அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களும், 652.85 மில்லியன் ரூபாவை ராஜாங்க அமைச்சர்களும், 564.49 மில்லியன் ரூபாவை பிரதியமைச்சர்களும் செலவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதில், நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சரின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விவரம் வருமாறு;


டொயோட்டா லேன்ட் குரூசர் (Toyota land cruiser) – 39.29 மில்லியன் ரூபா


டொயோட்டா லேன்ட் குரூசர் (Toyota land cruiser) – 39.90


மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes Benz) – 35 மில்லியன் ரூபா


நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சரின் பாவனைக்கான வாகன கொள்வனவுக்காக மட்டும், மொத்தமாக 114.19 மில்லியன் (சுமார் 11.5 கோடி) ரூபாய் செலவிடப்பட்டுள்ள

Related posts

வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

Editor

மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி

wpengine

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

wpengine