தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

செல்பிக்கு வந்த சோதனை! 20ஆயிரம் அபராதம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்  சரணாலயத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராதத்தை ஜடேஜாவின் சார்பாக ஜடேஜாவின் மாமனாரான ஹர்தேவ் சிங் சோலங்கி, ஜுனாகத் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் செலத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜடேஜா மே. இந்நிய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவதால் குறித்த அபராதத்தை  ஹர்தேவ் சிங் சோலங்கி செலுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி தனது மனைவியுடன் கிர் சரணாலயத்துக்கு  சுற்றுலா சென்ற ரவீந்திர ஜடேஜா, பாதுகாப்பு வாகனத்தில் இருந்து வெளியேறி சிங்கங்களுடன்  செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண் உழியர்களை பற்றிக் துணியிலான ஆடைகளை அணிய சொல்லும் தாயா

wpengine

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

wpengine

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம்

wpengine