உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

செல்பி மோகம்! நீரில் மூழ்கிய சோகம்

இந்தியா கர்நாடக மாநிலத்தில் ஏரி ஒன்றில் நீராட சென்ற நண்பர்கள் குழுவில் ஒரு மாணவன் நீரில் மூழ்கும் போது மற்றைய அனைவரும் அவரை கவனிக்காமல் செல்பி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஏரி ஒன்றுக்கு மாணவர்கள் குழுவாக சென்றுள்ளனர்.

ஏரியில் நீராடி கொண்டிருந்த போது ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் அனைவரையும் செல்பி எடுத்துள்ளார்.

செல்பி எடுக்கும் நேரத்தில் நீராடி கொண்டிருந்த விஷ்வாஸ் என்ற 17 வயது மாணவர் தண்ணீரில் தத்தளித்த படி மூழ்கியுள்ளார்.
ஆனால், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்ததால் அவர் மூழ்குவதை மற்றவர்கள் கவனிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து, விஷ்வாஸை காணாததால் நண்பர்கள் அனைவரும் தேடியுள்ளனர்.

இறுதியில், அவர் சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, பலியான விஷ்வாஸின் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவரது சடலத்தை கல்லூரியின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.

Related posts

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

wpengine

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஓதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிப்பு

wpengine

அளுத்கம இனக்கலவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்;ஹிஸ்புல்லாஹ்

wpengine