பிரதான செய்திகள்

சுவிஸ் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மே தினம் (படங்கள்)

(சுவிஸ் ரஞ்சன்)
நேற்றைய தினம் சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை தாயகத்தில் “தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை” அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்க்கும் வகையில்” கோஷங்களையும் முன்வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த முப்பந்தைந்து வருடமாக “புளொட்” சுவிஸ் கிளையினர் பல இடையூறுகள், அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடர்ச்சியாக, சுவிஸில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தந்தையின் இறுதி சடங்கு! பரீட்சைக்கு சென்ற சிறுமி! மனங்களை கனக்க வைக்கும் துயரம்

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்து நாளை அவசர கூட்டம்

wpengine

வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தமாக தற்போது, மிக துல்லியமான முறையில் விசாரணை

wpengine