பிரதான செய்திகள்

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் சிரமதான நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)
சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சூழல் சுத்தப்படுத்தல் சிரமதான நிகழ்வு மருதமுனை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரையின் பேரில் இந்த சூழல் சுத்தப்படுத்தல் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபையின் சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததுடன் சுகாதார மற்றும் பொறியியல் பிரிவுகளின் ஊழியர்கள் சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதுபோன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய சில பிரதேசங்களிலும் சூழல் சுத்தப்படுத்தல் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

Related posts

நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை சுற்றிவளைப்பு!

Editor

டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)

wpengine

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

wpengine