பிரதான செய்திகள்

சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம்! வன்னியில் 18,000 ரூபா

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண விபரம் ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு ஒன்று 44,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு 20,000 ரூபாவையும்,

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு 18,000 ரூபாவையும்,

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் குழு 22,000 ரூபாவையும் ,

திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் குழு 14,000 ரூபாவையும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் குழு 16,000 ரூபாவையும்,

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் குழு 16,000 ரூபாவையும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் குழு 20,000 ரூபாவையும்,

மாநுவர – கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 30,000 ரூபாபாவையும் கட்டுப்பணமான செலுத்த வேண்டும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மாகாண எல்லை மீள்நிர்ணயம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில்

wpengine

SLMC & ACMC எம்.பிக்கள் இன்று இனவாதியுடன் யார் இந்த உதயகமன்வில?

wpengine

மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இரணைதீவுவில் முஸ்லிம் ஜனாஷா அடக்க தீர்மானம்

wpengine