கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபர் இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் கடைசியாக களுத்துறை பிரதேசத்தில் 5 லட்சம் ரூபாவிற்கு நகை கொள்வனவு செய்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அதன் பிறகு அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 இடங்களில் செவ்வந்தியை தேடியும் பொலிஸாருக்கு அவர் கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் அவர் கடல் மார்க்காமாக இந்தியாவிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.