பிரதான செய்திகள்

சுனாமி எச்சரிக்கை! கரையோர மக்கள் அவதானம்

இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இந்த முன்னெச்சரிக்கை தெளிவூட்டல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்படுவதுடன், இதற்காக காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த தெளிவூட்டல் செயற்பாடு ஒரு மணித்தியாலம்வரை இடம்பெறவுள்ளது.

Related posts

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு

wpengine

மஸ்தானுக்கு பிரதி அமைச்சு! இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

wpengine

குழாய்க்கிணறு ஒன்றை அமைத்து தருவதாக மஸ்தான் (பா.உ) உறுதி

wpengine