பிரதான செய்திகள்

சுதாகரனின் விடுதலை கோரி மன்னார் மாவட்ட செயலகத்தில் மகஜர்

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய வலியுறுத்திய கோரிக்கை அடங்கிய கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளாகிய இருவரும் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு – கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மன்னாரில் கடந்த 24ஆம் திகதி சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த கையெழுத்து போராட்டம் நேற்று காலையுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், கோரிக்கை அடங்கிய கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி வைபவ ரீதியாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும், மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்தும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் இடம்பெற்ற நிலையில் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரர் விவகாரம்! ஜனாதிபதியிடம் முஸ்லிம் எம்பிக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.

wpengine

ஊடகங்களின் கவனத்திற்கு! பொலிஸ் ஊடகம் பிரிவு

wpengine

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன்

wpengine