பிரதான செய்திகள்

சீனாவின் முக்கியமான விகாரைக்கு சென்ற மஹிந்த

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா செய்த நேரடி உதவிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா சென்றுள்ள மஹிந்த, பொருளாதார, கலாச்சார, மற்றும் பௌத்த மத ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே மஹிந்த சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,

சீனாவின் அழைப்பின்பேரிலேயே மஹிந்த உள்ளிட்ட குழுவினர் சீனா வந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கும், இந்த விஜயத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் முக்கியமான பொருளாதார நிலையங்களுக்கும், டபோர் விஹாரைக்கும் சென்றதாக அறிவித்தார்.625-0-560-320-160-600-053-800-668-160-90-2

குறித்த டபோர் விஹாரையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பெளத்த உறவுகளை வலுப்படுத்தும் இடம் என்பதுடன், மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இந்த விகாரையுடன் தமக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், சீனாவில் உள்ள இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ, ஜீ.எல்.பீரிஸ், லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் சீனா சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரை சந்தித்த குவைட் தூதுக் குழுவினர்.

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தில் இணைந்த சேகு,ஹசன்

wpengine

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்

wpengine