உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனா வெளிவிவகார அமைச்சரை வரவேற்ற நாமல் இலங்கையில் பல நிகழ்வு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08) இரவு இலங்கை வந்தடைந்தது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார்.

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இரவு கொழும்பு துறைமுக நகருக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது துறைமுக நகரத்தில் பல திறப்பு வைபவங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டின் உயர் அதிகாரிகள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளார்.

இதேவேளை, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினம் இங்கு நினைவுகூரப்படவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது பல முதலீட்டு யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘இந்தியாவில் தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்’

Editor

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine

முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

wpengine