பிரதான செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் (Wei Fenghe), எதிர்வரும் 27ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர், எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் நாட்டிலிருந்து விடைபெற்று செல்லவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் போது அவர் இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து, சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine

தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!

Editor

அல் ஜசீரா ஊடகத்தில் மன்னர் சல்மான் கடவுள்! கட்டுரையாளர் பணி நீக்கம்

wpengine