பிரதான செய்திகள்

சீ.வியின் கருத்துக்கு இசைக்கலைஞர் இராஜின் பதில்!

கடந்த சில தினங்களாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்முன்வைத்திருந்த சில கருத்துக்கள் இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இனவாத பிரச்சினைக்கு கருத்து மாறுபாடு ஏற்படக்கூடிய தன்னுடைய கருத்தை இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன தன்னுடைய உத்தியோகபூர்வ வலைத்தளமான முகப்புத்தகத்தில் இன்று காலை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த கருத்துக்களுக்கு பதலளிக்கும் வகையில் அவரது முதல் இசை காணொளியான “JTown Story” என்பதை பகிர்ந்துள்ளார்.

குறித்த இசை காணொளியானது 13 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பாடலுக்கு ரெப்பர்(rapper) ஆக வட மாகாண முதலமைச்சரின் இளைய மகனான யௌவணன் விக்னேஸ்வரனே இருந்தார் என்றும் இராஜ் கூறியுள்ளார்.

மேலும், குறித்த இசை காணொளியானது சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள்மூலமே சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டது என்றும் தனதுகருத்துக்களை இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.eeeee

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

மின்கல பாவனையாளர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து இணைப்புகளை துண்டிக்கும்படி கோரிக்கை .

Maash

தாக்குதல் இன்று ஆட்டம் காணும் ரணில் அரசு

wpengine