பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறையில் மின் ஒழுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த றிஸ்வான் என்பவரின் கூடாரத்தில் இன்று மாலை மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் வன்னி நியூஸ் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதன் போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லையென்றும் ,சிலாவத்துறையில் கடந்த வாரம் இடம்பெற்ற மரண விட்டிற்கு சுகம் விசாரிக்க வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேரடியாக சென்று அந்த கூடாரத்தினை பார்த்து விட்டு அவருக்கான சிறு பண உதவியினை செய்துள்ளார்.என்றும் அறிய முடிகின்றது.

மீள்குடியேற்ற செயலணியின் ஊடாக அமைச்சரின் சிபாரிசின் பேரில் இந்த முறை சிலாவத்துறை கிராம மக்களுக்கு 50 விடுகள் வழங்கப்பட்டுள்ளது. என்றும் அதற்கான முதல்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டு வேலைகள் இடம்பெறுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

8மாத காலப்பகுதியில் 8கோடிக்கு மேற்பட்ட தொலைபேசி பாவனை

wpengine

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த பலர் வாழ்த்து

wpengine

ரவூப் ஹக்கீமின் போலியான அரசியலும்,செயற்பாடும்

wpengine