மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை அமைந்திருக்கும் போதனாசிரியர் காரியாலயம் கடந்த பல மாதகாலமாக மூடிக்கிடப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் இயங்கி வந்த காரியாலயம் தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளன.
சிலாவத்துறை பகுதியில் பல ஏக்கர் விவசாய பயிர் செய்கை மேற்கொண்டுள்ள வேளையில் இவ்வாறு மூடி இருப்பதன் காரணமாக விவசாய ஆலோசனை பெற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் விசவாயிகள் தெரிவித்துள்ளார்கள்.