பிரதான செய்திகள்

சிறையில் வாடும் கைதிகள்! தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் அவரை சென்று பார்வையிடவில்லை.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதியில் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 15ம் திகதி முதல் மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவசிங்கம் என்பவர் உணவு தவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அறியமுடிகின்றது.

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுழிய சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில். அவர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று வரையில் தொடர்ந்துள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த அரசியல் கைதி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்து இன்று உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் அவரை சென்று பார்வையிடவில்லை.

எனினும், கடந்த 15ம் திகதி முதல் குறித்த அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவரை இதுவரை யாரும் சென்று பார்வையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாசிச புலிகளினால் கொலைசெய்யப்பட்ட ஷரீப் அலியின் நுால்வெளியீடு ஓட்டமாவடியில்

wpengine

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கிய மோடி ! அசாமில் சோனியா கடும் ஆவேசம்

wpengine

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு!

Editor