உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிறுவன் அய்லான் மரணம்: குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை

உலகை உலுக்கிய துருக்கி சிறுவன் அய்லானின் மரணத்திற்கு காரணமான 2 நபர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.aylan_justice_004

இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.aylan_justice_003

இந்த நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொத்ரும் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், படகுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏùஸம் அல்ஃப்ராத் ஆகிய இருவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆள் கடத்தல் வணிகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் கைது..!

Maash

விக்னேஸ்வரனின் கட்சி வடக்கில் ஒரு கொள்கை கிழக்கில் வேறு கொள்கை

wpengine

மனைவியினை தாக்கிய கணவன்! 30 ஆம் திகதி விளக்கமறியல்

wpengine