பிரதான செய்திகள்

சிறுமியின் மரணம்! கோட்டாபய ராஜபக்ஷ ஆழ்ந்த இரங்கல்

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

பாரிய குற்றம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் செய்தியில் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நேற்று (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற்றம்

wpengine

கொழும்பில் பல வாகனங்களுக்கு சீல் வைத்த மாநகர சபை

wpengine

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

Maash