பிரதான செய்திகள்

சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் நான் எதிர்ப்பேன்

சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து பாரிய கூட்டணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.


இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், எந்த ஒரு சக்தியும் சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் அதற்கு எதிராக நாம் முன்னின்று செயற்பட தயார்.


ஏற்கனவே இந்த முயற்சியின் கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இந்த கொள்கையை ஏற்று கொண்டுள்ளன.


இந்த நிலையில் சிவில் அமைப்புக்களையும் இணைத்து பாரிய கூட்டணி அமைக்கப்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

அரசியலுக்கு வருவதற்கு மன்னாரில் சமூக தனி மனித காரியங்களை ஆயுதமாக பேசுகின்றார்கள்

wpengine

பாடசாலை நேரத்தில் கவனம் செலுத்தும் வட மாகாண சபை

wpengine

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம்! சம்மாந்துறையில் தலைவர் ரிஷாட்

wpengine