பிரதான செய்திகள்

சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லதீப்க்கு பதவி வழங்கப்படவில்லை.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவினால் காவற்துறை விசேட நடவடிக்கைகளுக்கான செயலணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர். லதீப்பிற்கான பதவி இன்னும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, அதன்செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி எம்.ஆர். லதீப்பிற்கு இந்த பதவி வழங்கல் தொடர்பில் தேசிய காவற்துறை
ஆணைக்குழுவினால், காவற்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் இன்னும் அந்த பதவி வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள தேசிய காவற்துறை ஆணைக்குழுவின்க லந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவகங்களுக்கு செல்வது தடை!

Editor

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை!

Editor

20 ஆண்டுகள் நடைபெற்ற இப்தாரை ரத்து செய்த டிரம்ப்

wpengine