பிரதான செய்திகள்

சிமெந்து, குடி நீர் தொகுதிகளை வழங்கி வைத்த மாகாண உறுப்பினர் றயீஸ்

மன்னார், முசலி பகுதிக்கு விஜயம் செய்த வட மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எச்.எம். றயீஸ் அப்பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து பிரதேசத்தின் தேவைகள் மற்றும் அவர்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சம்பந்தமாக கேட்டறிந்தார்.

மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் தாங்கிகள்,சீமெந்து பைகள் என்பனவும் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் தமீம்,மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்,கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் மாகாண சபை உறுப்பினரின் 2017ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் சபந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

சமூக வலைத்தளத்தில் திருமண மோசடி! பலருக்கு எச்சரிக்கை

wpengine

டிரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம்

wpengine

மஹிந்தவின் வெளிநாட்டு பயணத்தின் இரகசியம் அம்பலம்

wpengine