பிரதான செய்திகள்

சிங்கள மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

புலிகள் போன்று உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


கன்னியாவில் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை பௌத்த நாடு என்பதை தமிழ் மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகையால் புலிகள் போன்று உறுமிக்கொண்டு ஒன்றாக கூடுவதையும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பிரச்சினைகளுக்குப் போராட்டம் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுவிப்பது இரு இனத்தவர்களுக்கும் ஏற்புடையதல்ல.

இதேவேளை தற்போதைய ஆட்சியில் இனக் கலவரமும் மதக் கலவரமும் மேலோங்கி காணப்படுகின்றது.

ஆனாலும் விரைவில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டு பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் சிங்கள ஆட்சி விரைவில் மலரும். அதில் மூவின இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையை உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி! அமைச்சர் றிஷாட் வேதனை

wpengine

அஸ்கிரிய பீடம் கண்டனம்! வட,கிழக்கில் இடம்பெறும் காடழிப்பை ஜனாதிபதி தடுக்க வேண்டும்

wpengine

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்-எஸ்.பி

wpengine