பிரதான செய்திகள்

சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும்: பகிரங்க எச்சரிக்கை

ஞானசார தேரர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிக்கப்படுகின்றது. ஆனால், ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும்.

இதனைப் புரிந்து செயற்படவேண்டும். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம் என்றும், இதனை செய்தால் நாட்டில் சிங்கள, பௌத்த புரட்சி வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பினைச் சேர்ந்த சிலர் குருநாகல் – கொக்கரெல்ல பகுதிக்குச் சென்று சிறுபான்மை மக்கள் வசிக்கும் இடத்தில் பிரச்சினை ஒன்றை மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்திருந்தது.

மேலும் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் முயற்சித்ததாகவும், இதற்கு எதிராக அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச! மஹிந்தவின் மகன் செயலாளராக நியமனம்

wpengine

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

wpengine

பவள விழா நாயகன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்! வாசகனின் வாக்கு மூலம்

wpengine