பிரதான செய்திகள்

சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா

இலங்கை சிங்­கள பெளத்த நாடு என்­பதை ஏற்­றுக்­கொள்ள அமைச்சர் மனோ கணேசன் மறுக்­கின்றார். எனவே அவரால் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஒரு­போதும் ஏற்­ப­டுத்த முடி­யா­தென பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி டிலாந்த விதா­னகே தெரி­வித்தார்.

 

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரரின் ஸ்ரீ சத்­தர்­மா­ரா­ஜித விஹா­ரையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவும் தாம் இரு­வரும் பண்­டா­ர­நா­யக்க கொள்­கை­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­ப­டுவோம் என்று பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூறி­யுள்­ளார்கள். அதன் பிர­காரம் நடந்து கொண்டும் உள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்க எதிர்­க்கட்சி தலை­வ­ராக இருந்த காலத்தில் இந்த நாட்டை சிங்­கள பெளத்தநாடு என  ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா இல்­லையா என அர­சாங்கத் தரப்­பி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அதனை அவரின் மக­ளான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மறந்­து­விட்டார்.

அவ்­வா­றி­ருக்­கின்ற போது தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பண்­டார­நா­யக்க கொள்­கைகளை மறக்­காமல் செயற்­ப­டு­வதும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்டோர் பண்­டார­நா­யக்க கொள்­கையை பின்­பற்­று­வ­தை­யிட்டும் பாராட்­டு­கின்றோம்.

அதன் பிர­காரம் அவர்கள் இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்­பதை பல இடங்­க­ளிலும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் என்­ப­தையும் நாங்கள் அறிவோம்.

ஆனால் இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்­கின்ற வார்த்­தையே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு ஒவ்­வா­மை­யாக உள்­ளது. அவர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுடன் சேர்ந்­து­கொண்டு நல்­லி­ணக்கம் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கின்றார்.

அவ்­வா­றி­ருக்­கின்ற போது அமைச்சர் மனோ கணேசன் இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அதனால் அவரால் ஒருபோதும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

Related posts

மின்கட்டணம் செலுத்தாத முன்னால் அமைச்சர் டக்ளஸ்

wpengine

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் பள்ளிமுனையில் அமைச்சர் றிசாத்

wpengine

யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

wpengine