பிரதான செய்திகள்

சிங்கம் பார்த்த சம்பிக்க

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர் ]
சிங்களவர்கள் ஒரு காலத்தில் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்கள் ஹிந்திப் படங்கள்தான்.ஆனால்,சமீபகாலமாக அவர்கள் தென் இந்திய தமிழ் படங்களை விரும்பிப் பார்ப்பது அதிகரித்துவிட்டது.

தமிழ் பேச முடியாவிட்டாலும் அதிகமான சிங்களவர்களால் அதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் சிங்கள உப தலைப்புகளுடன் இப்போது படங்கள் வெளி வருகின்றமையாலும் சிங்களவர்கள் புதுப்படங்கள் வெளிவந்ததும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு சென்று பார்க்கின்றனர்.

இது இவ்வாரு இருக்க சிங்கள அரசியல்வாதிலும் தமிழ் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.உதாரணத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சூர்யா நடித்த சிங்கம் திரைப்படங்கள் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டாராம்.

நாட்டுக்கு நல்லது செய்வதற்காக முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செயற்படும் ஓர் இளைஞனைப் பற்றியதுதான் அந்தப் படம் என்று அவரது சக நண்பர்களிடம் கூறி வருவதோடு அவர்களையும் பார்ப்பதற்குத் தூண்டுகிறாராம்.

Related posts

இன்று காலை தலைமன்னார் பிரதான விதியில் வாகன விபத்து! ஓருவர் உயிர் இழப்பு

wpengine

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் ஆளுநர் .

Maash

மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் வன்முறைக்கு இன்று 16 வருடங்கள்.

wpengine