செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

சாவகச்ச்சேரி பிரதேச செயலாளர் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இன்று மரணம்.!

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ,

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது .

இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார் .

சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Related posts

பண்டிகை காலத்தில் சட்டங்களை மீறிய 1200 சில்லறை வியாபாரிகளுக்கு சட்டநடவடிக்கை.

Maash

யாழில் , வாந்தியெடுத்தவர் திடீர் மரணம் . !

Maash

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர, சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி.!

Maash